20 Jul 2026, 05:34 UTC74 viewsread 31 August 2026 திருக்குறள் ஒரு அறக்குரல்
Join:https://whatsapp.com/channel/0029VayPy7k3rZZYAf0LVM1X
இன்று, உங்கள் வார்த்தைகள் கேட்பவருக்கு இனிமையைத் தந்ததா? பிறரின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்ததா?"
குறள் :
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
உரை :
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் …
Signed Valli
9 Sept 2025, 07:45 UTC211 viewsread 31 August 2026 திருக்குறள் ஒரு அறக்குரல்
ஒருவரின் பிறப்பு, குடும்பப் பின்னணி அல்லது சமூகத் தகுதியைப் பொருட்படுத்தாமல், அவரின் திறமை மற்றும் உழைப்பின் அடிப்படையில் மட்டுமே வெற்றி தீர்மானிக்கப்படும் ஒரு சமூகத்தை நாம் எவ்வாறு உருவாக்குவது?
(How do we create a society where success is determined solely by a person's skill and hard work, regardless of their birth, family background, or social status?)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் …
Signed Valli
8 Sept 2025, 06:34 UTC168 viewsread 31 August 2026 திருக்குறள் ஒரு அறக்குரல்
வாய் சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, செவிக்கு முக்கியத்துவம் தராத மனிதர்களின் வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது?
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.
கேள்வி | குறள் - 420
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
www.dharmabharat.org
# திருக்குறள்ஒருஅறக்குரல்
Signed Valli
14 Feb 2025, 01:58 UTC279 viewsread 31 August 2026 Photo
மழை பெய்யாமல் இருந்தால் என்ன நடக்கும்?
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
வானிலிருந்து மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
பசிஆறப் பயன்படுவது மழை நீரே என்று வான்சிறப்பு கூறப்பட்டது.
If rain fail, famine would rage over the wide earth even though it is encircled by the ocean.
வான் சிறப்பு | 13
#FeedingBhara…
Signed Valli
13 Feb 2025, 04:39 UTC192 views1 reactionsread 31 August 2026 Photo
உலகில் நேர்மை குறைந்து வரும்போது, ஒருவன் தன் மனதை வஞ்சகத்திலிருந்து காப்பது எப்படி?
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
அவமானப்படக் கூடாதென விரும்புகிறவன் எதையும் திருடாமை எனும் பண்பைத் தன் நெஞ்சில் காக்க வேண்டும் என்கிறார்.
இந்த நன்நடத்தைகள் எல்லாமே மனம்,மெய், வாக்கு மூன்றாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என யோகம் கூறும். இதை திரிகரணசுத்தி என்பர்.
-திருடாமை | 281
www.dharmabharat.org…
❤1
Signed Valli
11 Feb 2025, 23:23 UTC158 viewsread 31 August 2026 அறச் செயல் எது?
அறவினை யாது எனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்.
'அறச் செயல் எது என்று கேட்டால், அது எவ்வுயிரையும் கொல்லாமையேயாகும். அறமற்ற எல்லாச் செயல்களிலும் கொல்லுதல் இழுத்து விட்டு விடும்'.
-கொல்லாமை | 321
அறம் என்றால் என்ன என்று கேட்டால், எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே அறம். ஏனென்றால், ஒரு உயிரைக் கொன்றால், அது மற்ற எல்லாப் பாவங்களையும் செய்ய வழிவகுக்கும். கொலை செய்வது ஒரு தொடர் வினை போல, மற்ற தவற…
Signed Valli
11 Feb 2025, 01:40 UTC149 viewsread 31 August 2026 கல்வியின் அடிப்படை யாது?
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
எண் (கணிதம்) என்பதே ஒன்று, எழுத்து (மொழி) என்பதே மற்றொன்று. இந்த இரண்டும் வாழும் உயிர்களுக்கு கண்கள் போன்றவை.
The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live.
-கல்வி | 392
www.dharmabharat.org
#திருக்குறள் ஒரு அறக்குரல்
Signed Valli
8 Feb 2025, 00:17 UTC153 views1 reactionsread 31 August 2026 Photo
☮️ தவம் மேற்கொள்வோர் எந்த இரு குணங்களை கடைப்பிடிக்க வேண்டும்?
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.
தவத்தின் இயல்பு : தன்னைப் பாதிக்கும் துன்பங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மற்ற உயிர்களுக்குத் துன்பம் ஏற்படாதபடி கவனம் செலுத்த வேண்டும். உண்மையான தவம் என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு துன்பம் செய்யாமல், தன்னுடைய துன்பங்களை சகிப்பதுதான்.
-தவத்துவியல் | 261
www.dharmab…
👍1
Signed Valli
6 Feb 2025, 17:35 UTC148 views1 reactionsread 31 August 2026 Photo
ஒருவரின் கல்விக்கு எப்போது உண்மையான அர்த்தம் கிடைக்கும்?
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
ஒருவர் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை வணங்காவிட்டால், அந்த கல்வியால் என்ன பயன்?
-கடவுள் வாழ்த்து | 2
www.dharmabharat.org
#திருக்குறள் ஒரு அறக்குரல்
👍1
Signed Valli
6 Feb 2025, 00:35 UTC141 views1 reactionsread 31 August 2026 Photo
ஒருவருடைய அகத்தூய்மை எப்படி வெளிப்படும்?
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்.
உடல், உடை, சுற்றுப்புறத் தூய்மை நீரால் செய்து கொள்ளப்படும். உள்ளத் தூய்மை ஒருவர் பேசும் உண்மையால் வெளிப்படும்.
அகம், புறம் இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது குறள் கருத்து.
Water cleanseth but the outward form: but the purity of the heart is proved by truthfulness.
-வாய்மை | 298
வாய்மை: https://youtu.be/r…
👍1
Signed Valli
5 Feb 2025, 02:07 UTC123 views1 reactionsread 31 August 2026 Photo
வாய்மை என்றால் என்ன?
வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
வாய்மை (உண்மை) என்று கூறப்படுவது எது வென்றால், அது மற்றவர்க்குச் சிறிதும் தீமை இல்லாத சொற்களைக் கூறுதல் ஆகும்.
What is truthfulness ? It is the speaking of that which is free from even the slightest taint of evil.
வாய்மை: https://youtu.be/r3cHUJ7I4Jc?feature=shared
-வாய்மை | 291
👍1
Signed Valli
3 Feb 2025, 18:26 UTC135 views2 reactionsread 31 August 2026 Photo
மழை இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலை பெறாமல் போகும்.
- வான் சிறப்பு | 20
If there is no water, the world cannot exist. Similarly, if there is no rain, there can be no righteousness.
www.dharmabharat.org
#திருக்குறள் ஒரு அறக்குரல்
❤1👍1
Signed Valli
Showing the 12 most recent of 20 posts we hold for @thirukuraldaily. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.