10 Jul 2026, 11:25 UTC41 views1 reactionsread 7 August 2026 Photo
மின் வண்டியா❓ E20 இடர்பாடா⁉️
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலவையை அதிகரிக்கும் கொள்கை வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் நுகர்வோருக்கு, E20 எரிபொருள் ஒரு பெரிய மாற்றத்தையும் அதே நேரத்தில் பெரும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட பல நான்கு & இருசக்கர வாகனங்கள் E20 எரிபொருளுக்கு முழுமையாக ஏற்றவையாக இல்லாததால், பயணதூரக் குறைவு, இயந்திர முரைப்பு, கடின துவக்கம், எரிபொருள் …
👍1
24 Oct 2025, 05:57 UTC222 views1 reactionsread 7 August 2026 இரவு நேர சூரிய மின்சக்திக்காக 4,000 சுற்றுப்பாதை கண்ணாடிகளை அமைக்க புதிதாய் உருவாகும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
கலிபோர்னியா உள்ள ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் எனும் அந்நிறுவனம் அடுத்த ஆண்டு ஒரு செயல்விளக்க செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமெரிக்க ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது; இது 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 விண்வெளி கண்ணாடிகளை நிலைநிறுத்தும் திட்டத்தின் முதல் படியாகும்; இது உலகளவில் வானியலாளர்களிடமிருந்து கடுமையான…
👍1
12 Aug 2025, 04:13 UTC254 viewsread 7 August 2026 ஜப்பானியர்களில் 100 அகவைக்கு மேல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அவ்வரசின் தரவுகளின்படி 95,119 ஆக உயர்ந்துள்ளது. இதில் 88% விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நூற்றாண்டு கடந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 2,980 ஆக அதிகரித்து ஜப்பான் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
Posted without readable text
23 Jul 2025, 05:37 UTC323 views2 reactionsread 7 August 2026 தங்கந்தயாரிப்புப்புரட்சி (தங்கம் தயாரிப்பில் புரட்சி)
சிலிகான்வேலியிலுள்ள நிறுவனமான மராதான் பியுழ்சன் (Marathon Fusion) இதள்ளியைத் (பாதரசம் எனப்படும் mercury) தங்கமாக மாற்றும் அணுச்சேர்கை (nuclear fusion) முறையைக் கண்டுபிடித்ததாக அறிவிப்பு.
அறிவியல் விளக்கம்
அந்நிறுவனம் வெளியிட்ட அறிவியல் கட்டுரையின்படி, டியூட்டீரியம்-ட்ரிட்டியம் (deuterium-tritium) செயற்கை அணுச்சேர்கை வினைகளால் உருவாகும் உயராற்றல் நியூட்ரான்கள்,…
❤2
31 Jan 2025, 04:41 UTC388 views2 reactionsread 7 August 2026 ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலின் புளூபேர்ட் செயற்கைக்கோள்களுடன் இணைந்து தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசிகளைப் பயன்படுத்தி உலகின் முதல் செயற்கைக்கோள் காணொளி அழைப்பை வோடபோன் அடைந்தது.
இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான படிப்படியான விளக்கம்:
1. பயனரின் திறன்பேசி இணைப்பு:
பயனரின் தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசி, குறைந்த பூமி சுற்றுப்பாதையில் உள்ள புளூபேர்ட் செயற்கைக்கோளுடன் இணைகிறது. செயற்கைக்கோளுக்குத் தேவையான தொடர்புக்குடை அல…
❤1👍1
22 Jan 2025, 04:58 UTC291 views1 reactionsread 7 August 2026 பி.வி.100 அணு மின்கலமானது மின்சாரத்தை உருவாக்க வைர குறைக்கடத்தித் தொழில்நுட்பம் மற்றும் 2-மைக்ரான்-தடிமன் கொண்ட கதிரியக்க நிக்கல்-63 தனிமத்தின் மெல்லிய ஏடடுக்குக் கட்டமைப்பு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகிறது. வைர குறைக்கடத்தி மாற்றிகளுடன் நிக்கல்-63 சிதைவுக்கு உட்படுகையில் உமிழப்படும் எதிர்மின்மங்களை வைர மாற்றிகள் பயன்படுத்தக்கூடிய மின் ஆற்றலாகத் திறம்பட கைப்பற்றி மாற்றுகின்றன.
இதன் தற்போதைய வெளியீடு வெறும் 15 x…
👍1
9 Jan 2025, 05:31 UTC261 views2 reactionsread 7 August 2026 Photo
ஒளியால் தூண்டப்பட்ட காந்தமயமாக்கலால் யூரோபியம் அணுவின் சுழல்வுச் சீரமைப்பு.
நன்றி: ஆண்ட்ரே போஹோமோலெட்ஸ் ஹென்ரிக்ஸ்.
எம்ஐடி இயற்பியலாளர்கள் 50-வாட்திறன் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி 50 பைக்கோ (0.000,000,000,050) நொடிகளில் ஒரு பொருளில் நீண்டகாலமாக நீடிக்கும் காந்த நிலையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம் ஒரு அதிவேகக் காந்தத்தைக் கையாள அனுமதிக்கிறது, இம்முன்னேற்றத் தாக்கங்கள் பாரம்பரிய காந்தப் பொருட்களுக்கு அப்ப…
👍2
30 Dec 2024, 09:12 UTC317 views1 reactionsread 7 August 2026 Video
காற்று விசையாழிகளை அளவிடுவது பெரிய அளவிலான பயன்பாடுகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால், நகர்ப்புற சூழல்களுக்கு அவற்றை அளவிடுவது மிகவும் சிக்கலாக ஒன்றாகும். நகரங்களில் காற்றின் வேகம், பெரும்பாலும் வினாடிக்கு மூன்று முதல் நான்கு மீட்டர் வரை குறைவானது. நகர்ப்புறங்களில் காற்றலை ஆற்றலின் திறனைப் பயன்படுத்த, புதிய வடிவமைப்புகள் தேவை. குறிப்பாக இக்குறைந்த வேகம் மற்றும் கொந்தளிப்பான நிலைமைகளை அவை பூர்…
👍1
4 Dec 2024, 04:46 UTC295 viewsread 7 August 2026 ஒளியியல் ஒருங்கிணைந்த சுற்று அல்லது ஒளியியல் சில்லு என்பது மின்னணுக்களுக்குப் பதிலாக ஒளியைத் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் ஒரு நுண்சில்லு ஆகும். இச்சில்லுக்கள் ஒளியைக் கண்டறிய, உருவாக்க, கடத்த மற்றும் செயலாக்க பல ஒளியியல் கூறுகளைக் கொண்டு ஒன்றாக இயங்கும்; இது, பொதுவாக காணக்கூடிய அல்லது அருகிலுள்ள அகச்சிவப்பு நிறமாலையில் செயல்படுகின்றன.
ஒளியியல் சில்லுக்களின் முக்கிய கூறுகள்:
1. அங்கலன்கள்…
25 Oct 2024, 05:31 UTC246 viewsread 7 August 2026 Photo
ஐஸ்லாந்து நாட்டில் 2030 ஆம் ஆண்டுவாக்கில் விண்வெளியிலிருந்து நாள்முழுவதும் தடையின்றி 30 மெகாவாட் சூரிய ஆற்றலை நுண்ணலையின் (மைரோவேவ்) செரிவாற்றல் தூண் என்கிற ₹6725 கோடி செலவு பிடிக்கும் ஆய்வுத்திட்டம் மூலம் சுமார் 3,000 வீடுகளுக்கு வழங்க 64 டன் எடையும், சுமார் 1,312 அடி (400 மீட்டர்) அகலமும் கொண்ட செயற்கைக்கோள் 2,000 முதல் 36,000 கிலோமீட்டர்கள் வரையிலான சுற்றுவட்ட உயரப்பாதையில் வலம்வரவுள்ளதாம்.
24 Oct 2024, 15:14 UTC212 viewsread 7 August 2026 Photo
பிரிக்ஸ் நாடுகளின் வரவிருக்கும் டாலருக்கு மாற்றான பணம்.
Showing the 12 most recent of 20 posts we hold for @seithi. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.